கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள பாணந்துறை நிலங்கவின் வங்கிக் கணக்குகள் குறித்த அறிக்கைகளைப் பெறுவதற்கு குற்றப் புலனாய்வு திணைக்களத்தினருக்கு கொழும்பு நீதவான் நீதமன்றம் அனுமதியளித்துள்ளது.
குறித்த சந்தேக நபருக்கு சொந்தமான இரண்டு வங்கிக் கணக்குகள் மூலம் பணப்பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
போதைப்பொருள் கடத்தல் மற்றும் சந்தேக நபரால் செய்யப்பட்ட பிற குற்றச் செயல்கள் தொடர்பிலான விசாரணைகளைத் தொடர்வதற்கு இந்த வங்கிக் கணக்குகள் மூலம் மேற்கொள்ளப்பட்ட பணப் பரிவர்த்தனைகள் தொடர்பில் விசாரணை செய்வது அவசியம் எனறு குற்றப் புலனாய்வு பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில், குற்றப் புலனாய்வு பிரிவினரின் கோரிக்கையை பரிசீலித்த கொழும்பு தலைமை நீதவான் நேற்று (16) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
அதன்படி, குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் கோரிக்கையை ஏற்ற தலைமை நீதவான், சந்தேக நபரின் கணக்குகள் குறித்த அறிக்கைகளை வழங்குமாறு இரு வங்கிகளுக்கும் உத்தரவிட்டுள்ளார்















