முக்கியமாக ட்ரம்ப் அரசு கொண்டுவந்துள்ள ‘பிக் பியூட்டிஃபுல் பில்’ எனப்படும் வரிக் கொள்கை முட்டாள்த்தனமானது என்று மஸ்க் கருத்து வெளியிட்டு இருந்தனர்.
இதற்கு பதில் அளித்த ட்ரம்ப், “எலான் மஸ்க் சுயநினைவை இழந்துவிட்டார் என்றும், அவருடன் தன்னால் பேச முடியாது” என்று தெரிவித்தார். இதனையடுத்து ட்ரம்ப் – எலான் மஸ்க் இடையேயான உறவில் பாரிய விரிசல் ஏற்பட்டது.
இந்நிலையில், நீண்ட நாட்களுக்குப் பின்னர், சுட்டுக் கொல்லப்பட்ட ட்ரம்ப் ஆதரவாளர் சார்லி கிர்க்கிற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் எலான் மஸ்க் ஆகியோர் சந்தித்து கொண்டனர்.
இதனால் இருவர் இடையேயும் மீண்டும் நட்பு துளிர்விடத்தொடங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


















