இந்தோனேஷியாவில் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் கிழக்கு ஜாவா மாகாணத்தில் உள்ள ஒரு இஸ்லாமிய பாடசாலைக் கட்டிடமொன்று இடிந்து விழுந்தது.
குறித்த விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்துள்ள நிலையில் 99 பேர் காயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் குறித்த கட்டிட இடிபாடுகளுக்குள் 91 மாணவர்கள் சிக்கியுள்ளதாகவும் அவர்களை மீட்கும் முயற்சிகள் தீவிரமாக இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் பிரார்த்தனைக்காக மாணவர்கள் கூடிய வேளையிலேயே எதிர்பாராத குறித்த பாடசாலைக் கட்டிடம் இடிந்து விழுந்துள்ளது.
இந்நிலையில் மீட்பு குழுவினர் கனரக இயந்திரங்கள், டிரோன்கள் மற்றும் வெப்ப ஒளி கண்டறிதல் கருவிகளைப் பயன்படுத்தி சிக்கியவர்களை உயிருடன் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இரு மாடி கொண்டிருந்த கட்டிடத்திற்கு பலவீனமான அடித்தளம் இருந்ததால், மேலும் இரண்டு மாடிகள் கட்டப்பட்டதைத் தாங்க முடியாமல் இடிந்து விட்டதாக பேரிடர் மேலாண்மை அமைப்பு தெரிவித்துள்ளது.
குறித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
Related
Tags: இந்தோனேஷியா















