• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு உதைப்பந்தாட்டம்
‘துர்க்மேனிஸ்தானுடனான போட்டி சவால் மிக்கது’ – இலங்கை அணித் தலைவர் சுஜான் பெரேரா

‘துர்க்மேனிஸ்தானுடனான போட்டி சவால் மிக்கது’ – இலங்கை அணித் தலைவர் சுஜான் பெரேரா

Jeyaram Anojan by Jeyaram Anojan
2025/10/09
in உதைப்பந்தாட்டம், விளையாட்டு
68 1
A A
0
29
SHARES
983
VIEWS
Share on FacebookShare on Twitter

துர்க்மேனிஸ்தானுக்கு எதிராக நாளை வியாழக்கிழமை (இன்று) நடைபெறவுள்ள ஏஎவ்சி ஆசிய கிண்ண 3ஆவது தகுதிகாண் சுற்றின் கடைசி முதலாம் கட்டப் போட்டி இலங்கைக்கு சவால் மிக்கது. 

எனவே இலங்கை அணிக்கு கடுமையாக போராட வேண்டிவரும் என இலங்கை கால்பந்தாட்ட அணித் தலைவர் சுஜான் பெரேரா தெரிவித்தார்.

இலங்கைக்கும் துர்க்மேனிஸ்தானுக்கும் இடையிலான ஏஎவ்சி ஆசிய கிண்ணம் 2027 சவூதி அரேபியா 3 ஆவது தகுதிகாண் சுற்றின் முதலாம் கட்டப் போட்டி (டி குழு) கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் இன்று (09) பிற்பகல் 3.45 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

ஐந்து தினங்கள் கழித்து இரண்டு அணிகளும் அர்க்காதாக் விளையாடடரங்கில் நடைபெறவுள்ள இரண்டாம் கட்டப் போட்டியில் மொதவுள்ளன.

முதலாம் கட்டப் போட்டிக்கு முன்னதாக கால்பந்தாட்ட இல்ல கேட்போர்கூடத்தில் நேற்று (08) பிற்பகல் நடைபெற்ற ஊடக சந்திப்பில் ‘ஊடகங்கள்’ எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே துர்க்மேனிஸ்தான் சவால் மிக்க அணி என சுஜான் பெரேரா தெரிவித்தார்.

இலங்கைக்கும் துர்க்மேனிஸ்தானுக்கும் இடையில் 2003இலிருந்து 2019வரை நடைபெற்ற 6 போட்டிகளிலும் முழுக்க முழுக்க இலங்கையில் பிறந்த வீரர்களே விளையாடி இருந்தனர். 

அந்த வீரர்களைக் கொண்டு துர்க்மேனிஸ்தானுக்கு சவாலாக விளங்கி இறுக்கமான தோல்விகளையே இலங்கை தழுவியிருந்தது. 

ஒரு போட்டியை (2004இல்) வெற்றிதோல்வியின்றி முடித்துக்கொண்டது.

இப்போது ஐரோப்பிய நாடுகளிலும் அவுஸ்திரேலியாவிலும் பிறந்து அந்தந்த நாடுகளில் கால்பந்தாட்ட விளையாட்டில் ஈடுபட்டுவரும் வீரர்களே பெரும்பாலும் இலங்கையின் முதல் பதினொருவர் அணியில்  இடம்பெறுகின்றனர்.

அவர்களைக் கொண்டு துர்க்மேனிஸ்தானை வீழ்த்த முடியுமா அல்லது போட்டியை வெற்றிதோல்வியின்றி முடித்துக்கொள்ள முடியுமா என ‘ஊடகங்கள்’ கேள்வி எழுப்பியது.

அதற்கு பதிலளித்த சுஜான் பெரேரா, ‘அக்காலங்களில் முழுக்க முழுக்க உள்ளூர் கழகங்களில் விளையாடிய வீரர்கள் முழு வீச்சில் விளையாடியதை நான் அறிவேன். 

ஆனால், இப்போது உலக நாடுகளில் கால்பந்தாட்டம் எவ்வளவோ முன்னேறியுள்ளது. 

அதனால்தான் எமது அணியில் வெளிநாடுகளில் பிறந்த இலங்கை வம்சாவழிகளை இணைத்துக்கொண்டு விளையாடி வருகிறோம். 

துர்க்மேனிஸ்தான் இலகுவான அணியல்ல. 

கடும் சவால் மிக்கது. ஆனால், நாங்கள் கடும் பிரயாசை எடுத்துக்கொண்டு விளையாடி சிறந்த பெறுபேறை பதிவுசெய்ய முயற்சிப்போம்’ என்றார்.

வீரர்கள் அனைவரும் சிறந்த மனோநிலையுடன் நாளைய (இன்றைய) போட்டியையும் துர்க்மேனிஸ்தானில் ஒக்டோபர் 14 ஆம் திகதி இரண்டாம் கட்டப் போட்டியையும் எதிர்கொள்ளவுள்ளதாகவும் சுஜான் பெரேரா கூறினார்.

இதேவேளை, இலங்கை அணி கடும் சவால்மிக்கது என துர்க்மேனிஸ்தான் கால்பந்தாட்டப் பயிற்றுநர் ரோவ்ஷான் மெரிடோவ் தெரிவித்தார்.

ஏஎவ்சி ஆசிய கிண்ணம் 2027க்கான இறுதிச் சுற்றில் துர்க்மேனிஸ்தானை பங்குபற்றச் செய்வதே தனது குறிக்கோள் என அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கையுடனான போட்டியில் உங்களால் சாதிக்க முடியுமா என அவரிடம் கேட்டபோது,

‘நாங்கள் இதுவரை விளையாடிய 2 போட்டிகளிலும் வெற்றியீட்டி 6 புள்ளிகளுடன் டி குழுவில் முதலிடத்தில் உள்ளோம். ஆனால், சர்வதேச கால்பந்தாட்ட அரங்கில் வெகுவாக முன்னேறியுள்ள இலங்கையை எதிர்கொள்வது இலகுவல்ல. அவ்வணியுடன் விளையாடுவது சவால் மிக்கது. 

எனவே,6 புள்ளிகளை ஒதுக்கிவைத்துவிட்டு பூஜ்ஜியத்திலிருந்து எமது பயணத்தைத் தொடரவுள்ளோம். இலங்கை அணியை, குறிப்பாக அதன் சொந்த மண்ணில் குறைத்து மதிப்பிட நாங்கள் தயாராக இல்லை. 

எனவே இந்தப் போட்டியில் முழுப் பலத்துடன் விளையாடி வெற்றிபெற முயற்சிப்போம். 

ஏனெனில் எமது இலக்கு ஆசிய கிண்ணம் 2027 இறுதிச் சுற்றுக்கு தகுதிபெறுவதாகும்’ என ரோவ்ஷான் மெரிடோவ் கூறினார்.

டி குழுவில் இடம்பெறும் இலங்கை தனது முதலாவது போட்டியில் தாய்லாந்துக்கு கடும் சவாலாக விளங்கி 0 – 1 என்ற கோல் கணக்கில் இறுக்கமான தோல்வியைத் தழுவியது.

எனினும் சைனீஸ் தாய்ப்பே வுக்கு எதிரான இரண்டாவது போட்டியில் மிக அற்புதமாக விளையாடிய இலங்கை 3 – 1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றியீட்டியது.

துர்க்மேனிஸ்தான் தனது இரண்டு போட்டிகளிலும் முறையே சைனீஸ் தாய்ப்பேயை 2 – 1 என்ற கோல்கள் வித்தியாசத்திலும் தாய்லாந்தை 3 – 1 என்ற கோல்கள் வித்தியாசத்திலும் வெற்றிகொண்டு 6 புள்ளிகளுடன் டி குழுவுக்கான அணிகள் நிலையில் முதலிடத்தில் இருக்கிறது.

இலங்கையும் துர்க்மேனிஸ்தானும் ஒன்றையொன்று 6 தடவைகள் எதிர்த்தாடியுள்ளன. அவற்றில் ஐந்தில் துர்க்மேனிஸ்தான் வெற்றிபெற்றதுடன் ஒரு போட்டி வெற்றிதோல்வியின்றி முடிவடைந்துள்ளது.

பீபா கால்பந்தாட்ட தரவரிசையில் இலங்கை 197ஆவது இடத்திலும் துர்க்மேனிஸ்தான் 138ஆவது இடத்திலும் இருக்கின்றன.

இலங்கை குழாம்

சுஜான் பெரேரா (தலைவர்), கவீஷ் பெர்னாண்டோ, மொஹமத் முர்சித், மொஹமத் ஹஸ்மீர், ஜேசன் தயாபரன், அனுஜன் ராஜேந்த்ரம், குளோடியோ கெமர்க்நெச், ஸாஹி அத்திஸ், வில்லியம் தோமாசன், மோஹமத் முன்சிவ், கெரத் கெலி, ஆதவன் ராஜமோகன், நிலோஷன் செந்தூர்வாசன், லியோன் பெரேரா, ஜெரெமி பெரேரா, பாரத் சுரேஷ், அமான் பைஸர், வசீம் ராஸீக், வேட் டெக்கர், ஒலிவர் கெலாட், சாம் டுரான்ட், டிலொன் டி சில்வா, ராஹுல் சுரேஷ்.

blank

blank

blank

Related

Tags: ஏஎவ்சி ஆசிய கிண்ணம்கால்பந்துசுஜான் பெரேரா
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

முதல் பில்லியனர் கால்பந்து வீரரானார் கிறிஸ்டியானோ ரொனால்டோ!

Next Post

மஸ்கெலியா தேயிலை தொழிற்சாலை தீ விபத்து – செந்தில் தொண்டமான் கண்டனம்!

Related Posts

இந்தியாவை அவமதித்த வீரரை அணியில் சேர்த்த காவ்யா மாறன்
கிரிக்கெட்

இந்தியாவை அவமதித்த வீரரை அணியில் சேர்த்த காவ்யா மாறன்

2026-03-14
கொழும்பில் கோலாகலமாக ஆரம்பமான 15 ஆவது ‘இந்துக்களின் சமர்’ கிரிக்கெட் திருவிழா!
ஆசிரியர் தெரிவு

கொழும்பில் கோலாகலமாக ஆரம்பமான 15 ஆவது ‘இந்துக்களின் சமர்’ கிரிக்கெட் திருவிழா!

2026-03-13
தேசியக் கொடியை அவமதித்ததாக பாண்ட்யா மீது முறைப்பாடு!
கிரிக்கெட்

தேசியக் கொடியை அவமதித்ததாக பாண்ட்யா மீது முறைப்பாடு!

2026-03-12
2026 பீஃபா உலகக் கிண்ணத்தில் ஈரானின் பங்கேற்பு சந்தேகத்தில்!
ஆசிரியர் தெரிவு

2026 பீஃபா உலகக் கிண்ணத்தில் ஈரானின் பங்கேற்பு சந்தேகத்தில்!

2026-03-12
ஈரான் திரும்பும் வீராங்கனை: ஆஸ்திரேலியாவில் தஞ்சம் கோரியவர்களின் எண்ணிக்கை 6 ஆகக் குறைவு!
அமொிக்கா

ஈரான் திரும்பும் வீராங்கனை: ஆஸ்திரேலியாவில் தஞ்சம் கோரியவர்களின் எண்ணிக்கை 6 ஆகக் குறைவு!

2026-03-11
மத்திய கிழக்கு பதற்றம்; இலங்கை – ஆப்கானிஸ்தான் தொடர் ஒத்திவைப்பு!
கிரிக்கெட்

மத்திய கிழக்கு பதற்றம்; இலங்கை – ஆப்கானிஸ்தான் தொடர் ஒத்திவைப்பு!

2026-03-11
Next Post
மஸ்கெலியா தேயிலை தொழிற்சாலை தீ விபத்து – செந்தில் தொண்டமான் கண்டனம்!

மஸ்கெலியா தேயிலை தொழிற்சாலை தீ விபத்து - செந்தில் தொண்டமான் கண்டனம்!

அடுத்த 48 மணி நேரத்திற்குள் பிரான்ஸுக்குப் புதிய பிரதமர்!

அடுத்த 48 மணி நேரத்திற்குள் பிரான்ஸுக்குப் புதிய பிரதமர்!

5 ஆவது மீளாய்வு குறித்து இலங்கையுடன் IMF பணியாளர் மட்ட ஒப்பந்தம்!

5 ஆவது மீளாய்வு குறித்து இலங்கையுடன் IMF பணியாளர் மட்ட ஒப்பந்தம்!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

2026-03-11
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
ஜனாதிபதி அலுவலகத்தில் ஜப்பானிய உயர்மட்டக் குழு!

ஜனாதிபதி அலுவலகத்தில் ஜப்பானிய உயர்மட்டக் குழு!

0
ஈரானில் நிலைகுலைந்த 3.2 மில்லியன் மக்களின் வாழ்க்கை!

ஈரானில் நிலைகுலைந்த 3.2 மில்லியன் மக்களின் வாழ்க்கை!

0
AI-க்காக 16,000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் மெட்டா?

AI-க்காக 16,000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் மெட்டா?

0
முன்பள்ளி மாணவர்களின் இணையவழி வகுப்புகளுக்குத் தடை!

முன்பள்ளி மாணவர்களின் இணையவழி வகுப்புகளுக்குத் தடை!

0
யாழ். பல்கலையில் மூன்று பேர் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.