நேற்று இரவு இங்கிலாந்தின் ரயில் நிலையம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட கத்திக்குத்து தாக்குதல் குறித்து நேரில் பார்த்த நபர் ஒருவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
குறித்த தாக்குதல் நடந்தபோது மக்கள் ஒருவரையொருவர் மிதித்துக்கொண்டு கழிப்பறைகளில் ஒளிந்து கொண்டதாக சாட்சியாளர் தெரிவித்தார்.
அவர் லண்டனுக்குச் செல்லும் அதிவேக ரயிலில் பயணிக்க இருந்த நிலையில், “அவர்களிடம் கத்தி இருக்கிறது அதில் நான் குத்தப்பட்டேன்” என்றும் யாரோ கத்துவதைக் கேட்டதாகக் கூறினார்.
மேலும் குறித்த சாட்சி கூறுகையில், “இறங்கு !” என்று கூச்சலிடும் போது, பயணிகள் ரயிலை விட்டு வெளியேறத் துடித்ததாகவும் அந்த இடம் மிகவும் இரத்தக்களரியாக காணப்பட்டகாகவும் மக்களும் பொலிஸாரும் அந்த இடத்தில் இருந்ததாகவும் அவர் கூறினார்.
நேற்று மாலை 6.25 மணிக்கு (Doncaster) டான்காஸ்டரிலிருந்து லண்டன் கிங்ஸ் கிராஸுக்குச் (London King’s Cross) செல்லும் LNER ரயிலில் இரவு 7.36 மணியளவில் பாரிய கத்திக்குத்து சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
இதில் பத்து பேர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதுடன் – ஒன்பது பேர் உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த சம்பவம் குறித்து இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலும் விசாரணைகளை பயங்கரவாத எதிர்ப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.














