உற்பத்தித்திறன் மற்றும் செயல்திறனை அதிகரிக்கவும், இறுதியில் வரி செலுத்துவோருக்கு பணத்தை மிச்சப்படுத்தவும் அரசாங்கம் செயற்கை நுண்ணறிவில் பெரிய அளவில் நாட்டம் காட்டுவதுடன் இதனால் சில துறைகள் பின்தங்கிய நிலையில் உள்ளதாக இங்கிலாந்து ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மர் கூறுகையில், AI ஆனது பொது சேவைகளை மேம்படுத்தல், வேலைகளை உருவாக்குதல், மற்றும் குழந்தைகளின் எதிர்காலத்தை மேம்படுத்தல் போன்ற வேலைகளை செய்வதாகவும் இதனால் அதற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதாகவும் கூறியுள்ளார்.
AI ஒப்பந்தங்கள், உள்கட்டமைப்பு மற்றும் சேவைகளில் அரசு துறைகள் மொத்தமாக £3.35 பில்லியனுக்கும் அதிகமாக செலவிடுகின்றன, ஏனெனில் இந்த AI தொழிநுட்பம் 2018 ஆம் ஆண்டு முதலே புழக்கத்திற்கு வந்துள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, ஒவ்வொரு ஆண்டும் ஒப்பந்தங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் அதில்
உலகின் மிக சக்திவாய்ந்த வானிலை மற்றும் காலநிலை முன்னறிவிப்பு சூப்பர் கம்ப்யூட்டரை உருவாக்க மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் வானிலை அலுவலகம் 2021 இல் செய்து கொண்ட ஒப்பந்தம் மிக முக்கியமானது எனவும் தெரிவித்துள்ளார்.
இது மொத்தமாக £1 பில்லியனுக்கும் அதிகமாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.














