ஸ்காட்டிஷ் ஹைலேண்ட்ஸ் முகாம் தளத்தில் சிறுவன் ஒருவனை பாலியல் ரீதியாக துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவர் சிறைச்சாலையில் வைத்து உயிரிழந்துள்ளார்.
கடந்த ஜூலை 31 அன்று ஸ்காட்லாந்தில் உள்ள ஒரு முகாம் தளத்தில் எட்டு வயது சிறுவனை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட 44 வயதான ஜான் பெல் எனும் நபர் கடந்த செப்டம்பர் மாதம் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையிலேயே சிறையிலிருந்த குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, சிறைச்சாலை பராமரிப்பில் உள்ள ஒருவரின் மரணத்தைத் தொடர்ந்து, ஸ்காட்லாந்து காவல்துறைக்கு அறிவிக்கப்பட்டு, வழக்கு விசாரணைகள் உரிய நேரத்தில் நடத்தப்படுகின்றன என ஸ்காட்டிஷ் சிறைச்சாலை சேவை செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும், சனிக்கிழமை அதிகாலை 5.20 மணியளவில் ஸ்காட்லாந்து காவல்துறைக்கு மரணம் குறித்துத் தெரிவிக்கப்பட்டது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


















