தென் ஆப்ரிக்காவில் நடக்கும் ஜி 20 மாநாட்டில் அமெரிக்கா பங்கேற்கவில்லை என வெள்ளை மாளிகை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
தென் ஆப்ரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் இன்று முதல் நவ.23ம் திகதி வரை ஜி 20 நாட்டு தலைவர்கள் பங்கேற்கும் உச்சி மாநாடு நடைபெறுகிறது.
தென் ஆப்ரிக்காவில் நடக்கும் ஜி 20 மாநாட்டில் அமெரிக்கா பங்கேற்காது எனவும் தென் ஆப்ரிக்கா ஜனாதிபதி சிரில் ராமபோசா அமெரிக்காவை பற்றி எதிர்மறையாக பேசுகிறார் எனவும் இதனை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உள்ளிட்ட எங்களது குழுவினர் ஏற்கவில்லை எனவும் இதனால் ஜி 20 மாநாட்டில் அமெரிக்கா பங்கேற்காது எனவும் வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட் கூறியுள்ளார்.
இதேவேளை, ஏற்கனவே, ”தென் ஆப்ரிக்காவில் மனித உரிமை மீறல்கள் நடப்பதாக கூறி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஜி 20 உச்சி மாநாட்டில் எந்த அமெரிக்க அதிகாரியும் பங்கேற்க மாட்டார்கள்” என்று அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
















