• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
குறைந்த காற்றழுத்தம் ஆழமான தாழமுக்கமாக வலுவடையும் சாத்தியம்; மக்கள் அவதானம்

குறைந்த காற்றழுத்தம் ஆழமான தாழமுக்கமாக வலுவடையும் சாத்தியம்; மக்கள் அவதானம்

Jeyaram Anojan by Jeyaram Anojan
2025/11/28
in ஆசிரியர் தெரிவு, இலங்கை, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
968
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கைக்குத் தென்கிழக்காக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம் ஒரு தாழமுக்கமாக வலுவடைந்து மட்டக்களப்புக்குத் தென்கிழக்காக ஏறத்தாழ 210 கிலோ மீற்றர் தூரத்தில் வட அகலாங்கு 5.9°N இற்கும் கிழக்கு நெடுங்கோடு 82.6°E இற்கும் அருகில் மையம் கொண்டிருக்கின்றது. 

அது வடக்கு – வடமேற்குத் திசையில் நகரக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், அடுத்த 12 மணித்தியாலங்களில் ஒரு ஆழமான தாழமுக்கமாக வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இத் தொகுதியின் தாக்கம் காரணமாக நாட்டில் தற்போது நிலவும் பலத்த மழை நிலைமையும் கடும் காற்று நிலைமையும் அடுத்த சில நாட்களுக்கும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

இவ்விடயம் தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களத்தால் வழங்கப்படும் எதிர்கால முன்னறிவிப்புகள் மற்றும் அறிக்கைகள் தொடர்பாக பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறார்கள்.

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுவதுடன், அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் சில இடங்களில் 200 மி.மீ க்கும் அதிகமான மிகப் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதுடன், வடக்கு, மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் 150 மி.மீ க்கும் அதிகமான மிகப் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. 

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60-70 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் மிகப் பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

காற்று :

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு வடக்கு முதல் வரையான திசைகளிலிருந்து வீசக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப் படுகின்றது. 

காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60-70 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கடல் நிலை:

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பு முதல் மிகவும் கொந்தளிப்பு வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஊடாக காங்கேசந்துறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் கடல் அலைகள் 2.5 – 4.0 மீற்றர் உயரம் வரை மேலெழும்பக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது (இது கரைக்கு வரும் அலைகளின் உயரம் அல்ல).

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற் பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற் பிரதேசங்கள் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும்.

Related

Tags: Weatherமழைவானிலை
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

லண்டனில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட மாவீரர் தினம்..!

Next Post

இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

Related Posts

மத்திய மலைநாட்டை காக்க புதிய சட்டம்: ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு!
இலங்கை

மத்திய மலைநாட்டை காக்க புதிய சட்டம்: ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு!

2026-08-28
கண்டி எசல பெரஹேரா திருவிழாவின்  நீர் வெட்டும் சடங்கு !
இலங்கை

கண்டி எசல பெரஹேரா திருவிழாவின் நீர் வெட்டும் சடங்கு !

2026-08-28
பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை!
இலங்கை

பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை!

2026-08-28
22வது திருத்த மசோதாவை  எதிர்த்து 21 மனுக்கள் தாக்கல்!
இலங்கை

22வது திருத்தத்திற்கு ஆதரவாக மேலும் இரண்டு மனுக்கள் தாக்கல்!

2026-08-28
அரச மருந்தாளர் சங்கம் 31ஆம் திகதி ஒரு நாள் தொழிற்சங்கப் போராட்டம்!
இலங்கை

அரச மருந்தாளர் சங்கம் 31ஆம் திகதி ஒரு நாள் தொழிற்சங்கப் போராட்டம்!

2026-08-28
மத்திய மலைநாட்டைப் பாதுகாக்க உருவாகிறது புதிய அதிகாரசபை!
இலங்கை

மத்திய மலைநாட்டைப் பாதுகாக்க உருவாகிறது புதிய அதிகாரசபை!

2026-08-28
Next Post
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

மோசமான வானில‍ை; 43,991 பேர் பாதிப்பு, 56 பேர் உயிரிழப்பு

மோசமான வானில‍ை; 43,991 பேர் பாதிப்பு, 56 பேர் உயிரிழப்பு

அனைத்து ரயில் சேவைகளும் இரத்து!

அனைத்து ரயில் சேவைகளும் இரத்து!

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

2026-08-04
இலங்கை சுற்றுப்பயணத்தில் பும்ராவுக்குப் பதிலாக ஆகிப் நபி!

இலங்கை சுற்றுப்பயணத்தில் பும்ராவுக்குப் பதிலாக ஆகிப் நபி!

2026-08-03
மத்திய மலைநாட்டை காக்க புதிய சட்டம்: ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு!

மத்திய மலைநாட்டை காக்க புதிய சட்டம்: ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு!

0
கண்டி எசல பெரஹேரா திருவிழாவின்  நீர் வெட்டும் சடங்கு !

கண்டி எசல பெரஹேரா திருவிழாவின் நீர் வெட்டும் சடங்கு !

0
நோர்வேயின் மன்னர் ஐந்தாம் ஹரால்ட் காலமானார்!

நோர்வேயின் மன்னர் ஐந்தாம் ஹரால்ட் காலமானார்!

0
பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை!

பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை!

0
டிரான்ஸ்ஃபோர்மர்ஸ் நாயகனின் குரலுக்கு விடை கொடுத்த உலகம்!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.