எடின்பரோவில் உள்ள காப்பர் ப்ளாசம் (Copper Blossom) என்ற மதுபான சாலை முன்பு வைக்கப்பட்டிருந்த எட்டு அடி உயரமான மற்றும் விலையுயர்ந்த கிறிஸ்துமஸ் அலங்காரப் பொம்மை ஒன்று நபர் ஒருவரால் திருடப்பட்டுள்ளது.
நூலன் (Nolan) என்ற பெயருடைய இந்த பொம்மை, கடந்த திங்கற்கிழமை இரவு ஒரு இ-பைக் செலுத்திய நபரால் திருடப்பட்ட நிலையில் தற்போது அந்த சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
திருடப்பட்ட இந்த அலங்காரப் பொம்மையின் மதிப்பு சுமார் 900 பவுண்டுகள் ஆகும் என்பதால் மதுபான சாலை மேலாளர் பால் பாக்ஸ்டன் இந்த திருட்டை “பேரழிவுகரமானது” என்று வர்ணித்துள்ளார்.
மேலும் இந்தச் செயலின் போது ஒரு மேசையும் உடைக்கப்பட்டதுடன் திருடப்பட்ட பொருளைத் திரும்பப் பெறுவதில் நம்பிக்கை இல்லை என்றாலும், திருடன் குறித்து வெளியான செய்திகள் தொடர்பாக காவல்துறையினர் தற்போது விசாரித்து வருகின்றனர்.
இதேவேளை, இந்த திருட்டு சம்பவம் இடம்பெற்றபோது சுமார் பன்னிரண்டுக்கும் மேற்பட்ட மக்கள் திருடனைப் பார்த்தும் ஊழியர்களை எச்சரிக்கத் தவறிவிட்டனர் எனவும் இது திருட்டைத் தடுக்க ஒரு வாய்ப்பை இழந்தது எனவும் மதுபான சாலை மேலாளர் ( Paxton ) பாக்ஸ்டன் தெரிவித்துள்ளார்.














