மாவிலாறு பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து 211 பேரை விமானப்படை மீட்டுள்ளது.
அதன்படி விமானப்படையின் பெல் 412 ஹெலிகாப்டர் மற்றும் எம்ஐ 17 ஹெலிகாப்டர் மூலம் மக்கள் மீட்கப்பட்டதாக விமானப்படை ஊடகப் பேச்சாளர் குரூப் கேப்டன் எரங்க கீகனகே தெரிவித்தார்.
மீட்கப்பட்ட மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையில், மாவிலாறு குளக் கரை உடைந்ததால் சிக்கிய மக்களை மீட்கும் நடவடிக்கை இன்று காலை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் நேரடி மேற்பார்வையில் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.












