வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 442 ஆக உயர்ந்துள்ள நிலையில், இந்தோனேசிய மீட்புப் பணியாளர்கள் உயிர் பிழைத்தவர்களைத் தேடி வருகின்றனர்.
இந்தோனேசியாவில் வெள்ளம் மற்றும் மண்சரிவுகளினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 442 ஆக உயர்ந்துள்ளதாக அந் நட்டு அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை (நவ 30) தெரிவித்தனர்.
அவசர சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்ட சுமத்ரா தீவின் சில பகுதிகளை அணுகுவதற்கான தீவிர முயற்சிகளைத் தொடர்ந்தாலும், ஆயிரக்கணக்கான மக்கள் அத்தியாவசியப் பொருட்கள் இல்லாமல் தவித்தனர்.
வார இறுதியில் வானிலை மேம்பட்டதால், இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் மீட்புப் பணியாளர்கள் அதிக உடல்களை மீட்க உதவினர்.
கனரக உபகரணங்கள் இல்லாததால் ஆரம்ப மீட்பு முயற்சிகள் பாதிக்கப்படுள்ள நிலையில், சுமார் 402 பேர் இன்னும் காணாமல் போயுள்ளதாக தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் (BNPB) தெரிவித்துள்ளது.
இந்தோனேசியாவைத் தாக்கிய அண்மைய இயற்கை பேரழிவு இந்த வெள்ளமாகும்.
பசிபிக் படுகையில் எரிமலைகள் மற்றும் பிளவுக் கோடுகளின் வளைவான நெருப்பு வளையத்தில் அதன் இருப்பிடம் உள்ளதால், அங்கு அடிக்கடி நிலநடுக்கங்கள், எரிமலை வெடிப்புகள் மற்றும் சுனாமிகள் ஏற்படுகின்றன.














