கற்பிட்டி கடற்பரப்பில் நேற்று (05) இரவு கடற்படையினர் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போது, பெருமளவான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.
நேற்றிரவு சந்தேகத்திற்கிடமான படகொன்றை சோதனையிட்ட போது , 03 உர மூட்டைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒருதொகை போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
இதன்போது, 63 கிலோ 718 கிராம் ஐஸ் போதைப்பொருளும் 14 கிலோ 802 கிராம் ஹெரோயினும் கைப்பற்றப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட போதைப்பொருள் தொகை மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த படகின் உரிமையாளர் கற்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சந்தேக நபரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகம் முன்னெடுத்து வருகிறது.
















