டித்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் நிவாரணக்கொடுப்பனவுகள் மற்றும் நட்டஈடு தொடர்பான சுற்றறிக்கை நிதிஅமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது
இதற்கமைய அனர்த்தம் காரணமாக முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்கு பதிலாக புதிய வீடொன்றை நிர்மாணிப்பதற்காக 50 இலட்சம் ரூபா வழங்கப்படவுள்ளது.
புதியவீடொன்றை நிர்மாணிப்பதற்கு அரசாங்கத்தினால் காணி ஒன்றை வழங்குமுடியாத பட்சத்தில் வீடு கட்டுவதற்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகைக்கு மேலதிகமாக காணியொன்றை கொள்வனவு செய்வதற்காக 50 இலட்சம் ரூபா உதவித்தொகை வழங்கப்படவுள்ளதாக சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டித்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மக்களின் இயல்பு வாழ்க்கையை மீட்டெடுப்பதற்கான உடனடி நிவாரணம் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்கமைய டித்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் நிவாரணக்கொடுப்பனவுகள் மற்றும் நட்டஈடு தொடர்பாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க நேற்று நாடாளுமன்றில் தெரிவித்திருந்தார்
இந்த நிலையில் அது தொடர்பான சுற்றறிக்கை நிதி திட்டமிடல்பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் ஊடாக நேற்று இரவு வெளியிடப்பட்டுள்ளது
அனர்த்தத்தில் முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்கு புதிய வீடு கட்ட 50 இலட்சம் ரூபா வழங்கப்படவுள்ளது
புதியவீடொன்றை வழங்குவதற்கு அரச காணி வழங்கப்படவுள்ளதுடன் காணி இல்லாத பட்சத்தில் இழப்பீட்டுத் தொகைக்கு மேலதிகமாக காணயொன்றை கொள்வனவு செய்வதற்காக 50 இலட்சம் ரூபா உதவித்தொகை வழங்கப்படவுள்ளது
அனர்த்தத்தின் தாக்கத்தால் பகுதியளவு சேதமடைந்த வீடுகளை புனர்நிரமாணம் செய்ய அதிகபட்சமாக.25 இலட்சம் ரூபா வழங்கப்படவுள்ளது
பாதிக்கப்பட்ட வீடுகளில் மீளக்குடியேறுவதற்கான அத்தியாவசிய சமையலறை உபகரணங்களை கொள்வனவு செய்வத்றகு, உரிமையாளரைப் பொருட்படுத்தாமல், தலா வீடொன்றுக்கு 50, ஆயிரம் ரூபா வழங்கப்படவுள்ளது.
அத்துடன் , மண்சரிவு காரணமாக வீடுகளை இழந்த மற்றும் வீடுகள் முழமையாக சேதமடைந்தமையினால் தமது வாழ்வாதார நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்லஇயலாத நிலையில் உள்ளவர்கள் வீடு திரும்புவதற்கு 3 மாத காலத்திற்கு உதவித்தொகை வழங்கப்படவுள்ளது
இதன்படி டிசம்பர் ஜனவரி பெப்ரவரி ஆகிய மூன்று மாதங்களுக்கு உதவித்தொகை வழங்கப்படவுள்ளதுடன் இரண்டு அல்லது ஒரு அங்கத்தவரை கொண்ட குடும்பங்களுக்கு மாதாந்தமம் 25 ஆயிரம் ரூபா வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
மேலும் இரண்டுக்கு மேற்பட்ட அங்கத்தவர்களைக்கொண்ட குடும்பங்களுக்கு 50 ஆயிரம் ரூபா உதவித்தொகை வழங்கப்படவுள்ளது
வெள்ளம் மற்றும் மண்சரிவினால் வீடுகளை இழந்துள்ளவர்கள் புதிய வீடொன்றை நிர்மானிக்கும் வரை தற்காலிக இடங்களில் தங்கியிருப்பத்றகு 6 மாதகாலத்திற்கு மாதாந்த உதவித்தொகையாக 25 ஆயிரம் ரூபா வழங்கப்படவுள்ளதாகவும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட ட நெல், தானியங்கள் மற்றும் சோளம் போன்றவற்றுக்கு ஹெக்டெயாருக்கு 1 லட்சத்து 50,000 உதவித்தொகை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது
மேலும் சேதமடைந்த காய்கறி விளைச்சலுக்கு ஹெக்டெயாருக்கு 2 இலட்சம் ரூபா உதவித்தொகை வழங்கப்படவுள்ளது
சிறிய மற்றும் நடுத்தர வர்த்தக நடவடிக்கைகளை மீண்டும் ஆர்மபிப்பதற்கு 2 லட்சம் ரூபா உதவித்தொகை வழங்கப்படவுள்ளது
அனர்த்தத்தில் சேதமடைந்த மீன்பிடி படகுகள் ஒவ்வொன்றிற்கும் 4 இலட்சம் ரூபாவரை இழப்பீட்டு தொகையினை வழங்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளத
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் மற்றும் ஆடைகளை கொள்வனவு செய்வதற்காக 25 ஆயிரம் ரூபா உதவித்தொகை வழங்கப்படவுள்ளது.
அனர்த்தம் காரணமாக அங்கவீனமடைந்த நபர்கள் மற்றும் உயிரிழந்தவரின் நெருங்கிய உறவினருக்கு 10 லட்சம் ரூபா உதவித்தொகை வழங்கப்படவுள்ளது
உயிரிழந்தவரினக் இறுதிக்கிரிiயினை மேற்கொள்வதற்காக 50 ஆயிரம் ரூபா முற்பணம் வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது














