ஜனாதிபதி தலைமையில் மாத்தளை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்று இடம்பெற்றது
பொதுமக்களுக்கு தேவையான அவசர சேவைகளை வழங்குவதில் அனைத்து நிறுவனங்களுக்கிடையிலும் தொடர்ச்சியான தொடர்பைப் பேணுவது அவசியம் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வலியுறுத்தியுள்ளார்
மாத்தளை மாவட்ட செயலகத்தில் நேற்று நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளாhர்
அனத்தத்தினால் மாத்தளை மாவட்டத்தில் சேதமடைந்த நெடுஞ்சாலைகள், மின்சாரம், நீர் வழங்கல், தொடர்பாடல் மற்றும் நீர்ப்பாசனம் ஆகியவற்றை புனரமைத்தல் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்கள் மற்றும் சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில்களை மீண்டும் தொடங்குவதற்காக செயல்படுத்தப்பட்ட திட்டங்களின் முன்னேற்றத்தை ஜனாதிபதி இதன்போது ஆராய்ந்தார்.
மாவட்டத்தில் எதிர்வரும் 16 ஆம் திகதி இயலுமானவரை பாடசாலைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்குமாறும் கல்வி அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்












