வெள்ள அனர்த்தத்தினால் சேதமடைந்த பரந்தன் முல்லைத்தீவு யு-35 வீதியை புனரமைக்கும் பணிகள் இந்திய இராணுவ பொறியியல் குழுவினரின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தில் முல்லைத்தீவு யு-35 வீதியின் பதினொராவது கிலோமீற்றரில் உள்ள பாலம் சேதமடைந்தது
இந்த நிலையில் குறித்த பாலத்தினை புனரமைப்பதற்காக இந்திய இராணுவ பொறியியல் குழுவினர் நேற்று கிளிநொச்சிக்கு வருகை தந்தநிலையில் புனரமைப்பு பணிகளை முன்னெடுத்துள்ளனர்
அத்துடன் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர்












