டிட்வா புயலால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து சீனி, பருப்பு, பால் மா என்பன அடங்கிய ஒரு தொகை அத்தியாவசிய பொருட்கள் தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து இன்று திருகோணமலை அஷ்ரப் இறங்குதுறைக்கு வந்தடைந்தது.
தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து தமிழ்நாடு அரசின் சார்பில், டிட் வா’ புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு உதவிடும் வகையில் பருப்பு, சர்க்கரை, பால் மா உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை இலங்கை நாட்டிற்கு இந்தியா அன்பளிப்பாக வழங்கியிருந்த நிலையில்
அதனை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா, மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரொசான் அக்மீமன மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யு ஜீ எம் ஹேமந்த குமார ஆகியோர் பங்கேற்றிருந்ததுடன் யாழ்ப்பாணத்தின் இந்திய துணைத் துதுவர் சாய் முதளியிடம் இருந்து உத்தியோக பூர்வமாக பெற்றுக்கொண்டார்.












