கே. ரவிக்குமார் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி 1999ஆம் ஆண்டு வெளிவந்து பட்டிதொட்டி எங்கும் பட்டையை கிளப்பிய திரைப்படம் படையப்பா.
இப்படத்தில் சிவாஜி, ரம்யா கிருஷ்ணன், சௌந்தர்யா, லட்சுமி, நாசர், மணிவண்ணன், ராதாரவி என பலரும் நடித்திருந்தனர்.
ஏ.ஆர். ரஹ்மான் இந்த திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.
ரஜினிகாந்தின் திரை வாழ்க்கையில் மாபெரும் வெற்றியடைந்த, மக்கள் மத்தியில் ஆரவாரம் குறையாத திரைப்படங்களில் இதுவும் ஒன்று.
இந்த நிலையில், படையப்பா திரைப்படம் வெளியாகி 25 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு எதிர்வரும் 12 ஆம் திகதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாளான்று படையப்பா திரைப்படம் திரையரங்குகளில் மீள் திரையிடப்படவுள்ளது.
இதுகுறித்து ரஜினிகாந்த் காணொளி ஒன்றை வெளியிட்டு இருந்தார். இதில் படையப்பா படம் குறித்த நினைவுகளையும் பகிர்ந்துகொண்டார்.
இந்நிலையில் படையப்பா திரைப்படம் ரீ-ரிலீஸுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், ப்ரீ புக்கிங்கில் படையப்பா பட்டையை கிளப்பி வருகிறது.
இதுவரை நடந்த முன் பதிவில் மட்டுமே 30 லட்சம் ரூபாய் வசூல் செய்துள்ளது.
இது இப்படத்திற்கு கிடைத்துள்ள சென்சேஷனல் வரவேற்பு ஆகும்.















