டிசம்பர் மாதத்திற்குரிய மின்சாரம் மற்றும் நீர் கட்டணத்தில் 50 சதவீத தள்ளுபடியை வழங்குமாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
பாரிய வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவுகள் காரணமாக வீடுகள், வர்த்தக நிலையங்கள் மற்றும் தொழிற்சாலைகள் பெரும் சேதமடைந்துள்ள நிலையில் டிசம்பர் மாதத்திற்குரிய மின்சாரம் மற்றும் நீர் கட்டணத்தில் 50 சதவீத தள்ளுபடியை வழங்குமாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் ஜனாதிபதியிடம் கடிதம் மூலம் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.
பொருளாதாரத்திலும், உள ரீதியிலும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மீண்டும் வாழ்க்கையை முன்கொண்டு செல்ல உதவும் நோக்கத்தில், டிசம்பர் மாதத்திற்குரிய நீர் மற்றும் மின்சார கட்டணங்களில் 50 சதவீத தள்ளுபடியை வழங்குமாறு, கோரிக்கை விடுத்துள்ளார்.















