இலங்கை மற்றும் இந்தியாவின் கூட்டு ஏற்பாட்டில் நடைபெறும் ‘2026 இருபதுக்கு 20 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான நுழைவுச்சீட்டு விற்பனை இன்று (11) மாலை முதல் ஆரம்பமாகியுள்ளது.
இதற்கமைய, இலங்கை மற்றும் இந்தியாவைத் தளமாகக் கொண்ட கிரிக்கெட் ரசிகர்களுக்கு இன்று மாலை 6.45 மணி முதல் நுழைவுச்சீட்டுகளைக் கொள்வனவு செய்வதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.
இந்நிலையில் இலங்கை ரசிகர்கள் 1000 ரூபாய் எனும் ஆரம்ப விலையிலிருந்து நுழைவுச்சீட்டுகளைக் கொள்வனவு செய்ய முடியும் என சர்வதேச கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
10-வது முறையாக நடைபெறும் இந்த இருபதுக்கு 20 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர், 2026 பெப்ரவரி 7 முதல் மார்ச் 8 வரை நடைபெறவுள்ளது.
https://tickets.cricketworldcup.com என்ற இணையத்தளத்திற்குச் சென்று நுழைவுச்சீட்டுகளைக் கொள்வனவு செய்ய முடியும்.


















