கடந்த நாட்களில் நாடுமுழுவதும் நிலவிய சீரற்ற வானிலையால் சேதமடைந்த வீடுகளில், அதிகளவான வீட்டுச் சேதங்கள் கண்டி மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இந்த அனர்த்தத்தினால் இதுவரை கண்டி மாவட்டத்தில் 1,568 வீடுகள் முழுமையாக அழிவடைந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், அந்த மாவட்டத்தில் 14,111 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அண்மைய அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, இரண்டாவது அதிகளவான வீட்டுச் சேதங்கள் நுவரெலியா மாவட்டத்தில் பதிவாகியுள்ளதுடன், அந்த மாவட்டத்தில் 767 வீடுகள் முழுமையாகவும், மேலும் 3,742 வீடுகள் பகுதியளவும் சேதமடைந்துள்ளன.
மூன்றாவது அதிகளவான வீட்டுச் சேதங்கள் புத்தளம் மாவட்டத்தில் பதிவாகியுள்ளதுடன், அந்த மாவட்டத்தில் 627 வீடுகள் முழுமையாகவும், மேலும் 20,813 வீடுகள் பகுதியளவும் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், முறையே குருநாகல் மாவட்டத்தில் 594 வீடுகளும், பதுளை மாவட்டத்தில் 578 வீடுகளும், கேகாலை மாவட்டத்தில் 317 வீடுகளும், அனுராதபுர மாவட்டத்தில் 234 வீடுகளும், பொலன்னறுவை மாவட்டத்தில் 225 வீடுகளும் இந்த அனர்த்தத்தினால் முழுமையாக அழிவடைந்துள்ளன.














