காட்டு யானைகள் பரிதாபகரமாக உயிரிழக்கும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில் ஹரபரன மற்றும் இன்றும் அவ்வாறான ஒரு சம்பவம் பதிவாகியுள்ளது.
ஹபரணை – திருகோணமலை பிரதான வீதியில் 124ஆவது கிலோமீற்றர் மைல்கல் அருகில் வேனில் மோதி யானைக்குட்டி ஒன்று உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து இன்று அதிகாலை ஒரு மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
12 வயதுடைய 5 அடி உயரமான யானைக்குட்டி ஒன்றே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
அத்துடன் விபத்தின் போது வேனில் பயணித்த சாரதியும் பெண் ஒருவரும் காயமடைந்துள்ள நிலையில் ஹபரணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.














