மினுவாங்கொடை பகுதியில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவின் உத்தியோகத்தர்களுக்குக் கிடைத்த ரகசியத் தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட நேற்றையதினம் (27) முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போது, குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் இருந்து வௌிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி, மெகஸின் மற்றும் டி-56 ரக துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் 25 தோட்டாக்கள் என்பன பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் மினுவாங்கொடை, ஹீனட்டியன பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய சந்தேகநபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில் மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

















