யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் வீதியில் சென்ற பெண்ணை பின் தொடர்ந்து சங்கிலி அறுப்பில் ஈடுபட்ட இளைஞர்கள் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் வீதியில் சென்ற பெண்ணை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த இரு இளைஞர்கள் பெண்ணின் தங்க சங்கிலியை அறுத்துக்கொண்டு தப்பியோடினர்.
இது தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததை அடுத்து, துரித விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட குற்றத்தில் இருவரையும் , அவர்களுக்கு உடந்தையாக செயற்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் இருவருமாக நால்வரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளின் போது, அண்மையில் மாதாந்த தவணை கட்டணம் செலுத்தும் வகையில் (லீசிங்கில்) புதிதாக அதிநவீன மோட்டார் சைக்கிளை கொள்வனவு செய்ததாகவும் , அதற்கு தவணை கட்டணம் கட்ட பணம் இல்லாததால் , வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டோம் என பொலிசாரிடம் வாக்கு மூலம் அளித்துள்ளனர்.
நால்வரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

















