அமெரிக்க ஜனாதிபதியான டொனால்ட் ட்ரம்ப் சுவிட்சர்லாந்துக்கு வர தடை விதிக்கவேண்டும் என சுவிஸ் பசுமைக் கட்சித் தலைவர் சுவிஸ் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதியான டொனால்ட் டிரம்பை அங்கீகரிக்கப்படாத நபராக அறிவித்து, அவர் சுவிட்சர்லாந்தின் டாவோஸில் நடைபெற இருக்கும் உலக பொருளாதார மன்றக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு தடை விதிக்கவேண்டும் என்று சுவிஸ் பசுமைக் கட்சித் தலைவர் லிசா மஸ்ஸோன் சுவிஸ் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
டிரம்ப், வெனிசுலாவின் ஜனாதிபதியான நிக்கோலஸ் மதுரோவை கைது செய்தது சர்வதேச சட்டத்தை மீறுவதாகவும், நாட்டின் இறையாண்மையைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாகவும் தெரிவித்துள்ள லிசா, சுவிட்சர்லாந்து அவருக்கு இடம் கொடுக்கக்கூடாது என்றும் கூறியுள்ளார்.
இந்நிலையில், ட்ரம்பின் நடவடிக்கை சர்வதேச சட்ட மீறல் என்று சுவிஸ் அரசு ஒப்புக்கொண்டாலும், ட்ரம்ப் சுவிட்சர்லாந்துக்கு வருவதற்கு மறுப்பு தெரிவிக்க சட்டத்தில் இடம் இல்லை என்றும் சுவிஸ் அரசு தெரிவித்துள்ளது.















