இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நெடுந்தீவு மற்றும் காரைநகர் கடற்பரப்புகளில் மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான 23 இந்திய மீனவர்களும் எதிர்வரும் 21 ஆம் திகதி வரையில் மீண்டும் விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த டிசம்பர் 27, ஜனவரி 2 மற்றும் ஜனவரி 3 ஆம் திகதிகளில் கடற்படையினால் குறித்த மீனவர்கள் கைது செய்யப்பட்டு, நீதிமன்றினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் சந்தேகநபர்கள் இன்று காலை சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதனையடுத்து, அவர்களை எதிர்வரும் 21 ஆம் திகதி வரையில் மீண்டும் விளக்கமறியல் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.














