மது அருந்திவிட்டு வாகனங்கள் செலுத்துபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
பிற போதைப்பொருட்கள் பாவனையில் ஈடுபட்டு வாகனங்களை செலுத்தும் சாரதிகளுக்கு எதிராக இன்று முதல் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று (08) நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டார்.
விதிமுறைகள் இல்லாததால் சட்ட நடவடிக்கைகளை அமுல்படுத்துவது கடினமாக இருந்த நிலையில், அவர்களுக்கு எதிராக இன்று முதல் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
மூன்று முதல் நான்கு நிமிடங்களுக்குள் 12 வகையான போதைப்பொருள் பாவனையை கண்டறியும் திறன் கொண்ட நடமாடும் ஆய்வகங்களை அமைக்கும் திறன் தம்மிடம் இருப்பதாக அமைச்சர் மேலும் கூறினார்.
இதனால் பரிசோதனை முடிவுகளை அச்சிட்டு நேரடியாக சாரதிகளுககு வழங்க முடியும் என்றும் போக்குவரத்து அமைச்சர் மேலும் கூறினார்.
















