இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி தம்புள்ளை, ரங்கிரி சர்வதேச கிக்கெட் மைதானத்தில் இன்று (09) இரவு ஆரம்பமாகவுள்ளது.
சல்மான் அலி ஆகா தலைமையிலான பாகிஸ்தான் அணி, 2026 டி20 உலகக் கிண்ணத்துக்கான ஆயத்தப் பணிகளை சிறப்பாகத் தொடங்கிய நிலையில் தொடரின் முதல் ஆட்டத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது.
இரு அணிகளுக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இந்தத் தொடர், பெப்ரவரி 7 முதல் மார்ச் 8 வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவிருக்கும் 20 அணிகள் கொண்ட உலகளாவிய போட்டிக்கு முன்னதாக தங்கள் திறமைகளை மேம்படுத்திக் கொள்ள ஒரு சரியான வாய்ப்பாகும்.
இந்த நிலையில் பாகிஸ்தானுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை கைப்பற்ற வேண்டுமென்றால் இலங்கை அணிக்கு இன்றைய போட்டியின் வெற்றி கட்டாயமாகும்.
ஏனெனில் புதன்கிழமை (07) நடந்த தொடரின் முதலாவது போட்டியில் பாகிஸ்தான் ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


















