கொழும்பு – கண்டி வீதியின் கடவத்தை பகுதியில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கட்டுமானப் பணிகள் காரணமாக கொழும்பு – கண்டி வீதியில் பண்டாரவத்தை, புவக்பிட்டிய பகுதியில் வீதியின் ஒரு மருங்கு எதிர்வரும் மார்ச் மாதம் 15ஆம் திகதி வரை மூடப்படும் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கடவத்தை – மீரிகம அதிவேக இடமாறல் கட்டுமானப் பணிகள் காரணமாகவே இந்த போக்குவரத்துத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
மாற்று வழியாக, கடவத்தை நகர மத்தியிலுள்ள மின்சிக்னல் சந்தியில் இருந்து அதிவேக வீதிப் பிரவேச வீதி ஊடாக எல்தெனிய மின்சிக்னல் சந்தி வரையிலான வீதியைப் பயன்படுத்த முடியும் என பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.












