காரை நகரில் முன்னாள் இந்து கலாச்சார அமைச்சர் தியாகராஜா மகேஸ்வரனின் பிறந்த தினமான இன்றைய தினம் மகேஸ்வரன் பெயர் பலகை பொறிக்கப்பட்ட வீதி ஒன்று திறந்து வைக்கப்பட்டது.
காரைநகர் பிரதேச சபையின் முன்னாள் உப தவிசாளர் க.பாலச்சந்திரனால் 2018ம் ஆண்டு காரைநகர் சின்னாலடி வீதியை முன்னாள் இந்து கலாச்சார அமைச்சரின் நினைவாக மகேஸ்வரன் வீதியாக மாற்றக்கோரி சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பின்னர் 2022 டிசம்பர் மாதம் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டு தற்போதைய காரைநகர் பிரதேச சபையின் உறுப்பினர் த. செந்தூரனின் வேண்டுகோளுக்கிணங்க அமரர் மகேஸ்வரனின் பிறந்த தினமான இன்று காலை 10.30 மணிக்கு பிரதேச சபை தவிசாளர் கிருஸ்ணன் கோவிந்தராஜ்,உபதவிசாளர் மற்றும் உறுப்பினர்கள்,பொதுமக்களின் பங்குபற்றுதலுடன் வீதிக்கான பெயர்ப்பலகை திரைநீக்கம் செய்து திறந்து வைக்கப்பட்டது.












