பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சகத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்தை அணுகுவது தற்காலிகமாக செயலிழந்துள்ளது.
அதன்படி, குறித்த உத்தியோகபூர்வ இணையத்தளத்தை அணுகும்போது, இணையத்தளம் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.அமைச்சு தொடர்பில் ஏதேனும் விசாரணைகள் இருப்பின், அதில் குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி இலக்கம் அல்லது மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளுமாறும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த நிலைமை தொடர்பில் கருத்து தெரிவித்த பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சகம், தொடர்புடைய இணையதளத்தை மீள செயல்படுத்தும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.












