இலங்கைக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகராலய அரசியல் துறை பொறுப்பாளர் டாம் சோப்பர்
அக்கரைப்பற்று மாநகர முதல்வர் ஏ.எல்.எம். அதாஉல்லாவை சினேகபூர்வமாக சந்தித்து பலதரப்பட்ட விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடினார்.
இலங்கைக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயத்தின் அரசியல் துறைத் தலைவர் இதன் போது சந்தித்து பிரதேச அபிவிருத்தி சமகால அரசியல் நிலைமை மற்றும் அரசாங்கத்துடன் உள்ள ஒத்துழைப்பு தொடர்பாக விரிவான கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
எதிர்காலத்தில் பிரதேசத்தின் கல்வி உள்ளிட்ட மக்களின் அடிப்படை தேவைகளையும் மேம்படுத்த பிரித்தானிய அரசாங்கத்தின் ஒத்துழைப்பு அவசியம் தொடர்பாக அக்கரைப்பற்று மாநகர முதல்வர் வலியுறுத்தினார்.
இதன்போது பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயத்தில் அரசியல் ஆலோசகர் இன்ஷாப் பக்கீர் மார்கரும் கலந்து கொண்டார்.













