நுவரெலியா – ஹட்டன் (A7) பிரதான வீதியின் வெண்டிகோனர் பகுதியில் இன்று (11) காலை மோட்டார் சைக்கிளும் லொறியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
நுவரெலியாவிலிருந்து ஹட்டன் நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிளும், எதிர்த்திசையில் ஹட்டனிலிருந்து நுவரெலியா நோக்கிப் பயணித்த லொறியும் மோதியதாலேயே குறித்த விபத்து நேர்ந்துள்ளது.
விபத்தின் தாக்கத்தால் மோட்டார் சைக்கிள் பலத்த சேதமடைந்துள்ளது.
இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்தி சென்றவரே படுகாயமடைந்த நிலையில், நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, விபத்து சம்பவம் தொடர்பில் லொறியின் சாரதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.












