கல்முனை பிராந்திய மலேரியா தடை இயக்கப் பிரிவின் நிர்வாக மற்றும் களச் செயற்பாடுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், மலேரியா தடை இயக்கப் பிரிவுக்கு அத்தியாவசிய இலத்திரனியல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இடம்பெற்றது.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், குறித்த பிரிவின் நீண்டகாலத் தேவையாகக் காணப்பட்ட போட்டோ கொப்பி இயந்திரம், ஒலிபெருக்கி சாதனங்கள் உள்ளிட்ட பல்வேறு இலத்திரனியல் உபகரணங்கள் கையளிக்கப்பட்டன.
பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் அவர்கள் பிராந்திய மலேரியா தடை இயக்கப் பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எஸ்.ஐ.எம்.கபீரிடம் குறித்த உபகரணங்களை கையளித்தார்.
இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஏ. பீ.மசூத், பிராந்திய கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.சீ.எம்.மாஹிர், கணக்காளர் திருமதி உசைனா பாரிஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
மலேரியா ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளைச் சிறப்பாக முன்னெடுப்பதற்கும், அலுவலக நிர்வாகப் பணிகளை தடையின்றி திறம்பட மேற்கொள்வதற்கும் இந்த உபகரணங்கள் பெரிதும் உதவியாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.













