கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சகீலா இஸ்ஸடீன் வழிகாட்டலில் அண்மையில் இப்பிரதேசத்தில் டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டதை கருத்திற்கொண்டு சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி ஜெ.மதனின் ஆலோசனைக்கமைவாக இச்செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.
இது தவிர சாய்ந்தமருது மக்களுக்கு டெங்கு நோயை தடுப்பதற்கான வாய்மொழி மூலமான அறிவித்தல் எமது அலுவலக வாகனத்தின் மூலம் அறிவிப்பு செய்யப்பட்டது.
இதில் எமது பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் நுளம்பு களத்தடுப்பு உதவியாளர்கள் பங்கு பெற்றனர்.டெங்கு உள்ளிட்ட நுளம்பால் பரவும் நோய்களை கட்டுப்படுத்தும் நோக்குடன் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் இந்த நடவடிக்கையில் வீடுகள், வர்த்தக நிலையங்கள் மற்றும் பொது இடங்களை ஆய்வு செய்த குழுவினர். நுளம்பு பெருக்கத்திற்கு வழிவகுக்கும் நீர் தேங்கிய இடங்களை கண்டறிந்து அவற்றை அகற்றும் நடவடிக்கைகளையும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு அறிவுறுத்தல்களையும் வழங்கினர்.
நுளம்பு கட்டுப்பாட்டில் பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் என சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தியதுடன், சுற்றுப்புற சூழலை தூய்மையாக பேணுவதன் மூலம் டெங்கு அபாயத்தை குறைக்க முடியும் என தெரிவித்தனர்.













