அவுஸ்திரேலிய மகளிர் அணியின் தலைவரும், எட்டு உலகக் கிண்ணப் பட்டங்களை வென்ற அனைத்து காலத்திலும் மிகவும் வெற்றிகரமான வீராங்கனைகளில் ஒருவராக கருதப்படும் அலிசா ஹீலி (Alyssa Healy) ஓய்வு குறித்த தீர்மானத்தை வெளியிட்டுள்ளார்.
அதன்படி, எதிர்வரும் பெப்ரவரி-மார்ச் மாதத்தில் இந்தியாவுக்கு எதிரான பல வடிவிலான உள்நாட்டுத் தொடருக்குப் பின்னர் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக 35 வயது வீராங்கனை கூறியுள்ளார்.
2023 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் அவுஸ்திரேலிய மகளிர் அணியின் முழுநேர தலைவராக நியமிக்கப்பட்ட ஹீலி, இந்தியாவுடனான தொடரில் டி20 போட்டிகளில் விளையாட மாட்டார்.
ஆனால் மார்ச் 6-9 வரை நடைபெறும் பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் விளையாடுவார்.
அதேநேரம், தனது தொழில் பயணத்தை முடிப்பதற்கு முன்பு ஒருநாள் போட்டிகளிலும் விளையாடுவார்.
15 வருடகால சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் அவர் அனைத்து வடிவிலும் சுமார் 300 போட்டிகளில் விளையாடியுள்ளார்,
7,000க்கும் மேற்பட்ட ஓட்டங்களை விளாசியுள்ளார் மற்றும் 275 ஆட்டமிழப்புகளை மேற்கொண்டுள்ளார்.
அவர் தலைமையில் அவுஸ்திரேலியா இரண்டு முறை சர்வதேச ஒருநாள் உலகக் கிண்ணத்தை வென்றுள்ளது.
2022 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் அதிகபட்ச தனிநபர் ஸ்கோரான 170 ஓட்டங்களை எடுத்தார்.
மேலும் ஆறு முறை டி20 உலகக் கிண்ணத்தையும் வென்றுள்ளார்.















