அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் நிர்வாக சீர்கேட்டினால் நோயாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும் இதனால், வைத்தியசாலையின் பணிப்பாளரை இடமாற்றுமாறு கோரி இன்று (செவ்வாய்கிழமை) கிழக்கு மாகாணம் தழுவிய ரீதியில் வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து நிர்வாக சீர்கேடு இடம் பெற்றுவருவதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
எனவே வைத்திய பணிப்பாளரை உடன் இடமாற்றக் கோரி மனித உரிமை அமைப்புக்களினால் கடந்த 04ஆம் திகதி போராட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்பட்டிருந்ததுடன் வைத்தியசாலையில் இடம்பெற்றுவரும் அடிதடி கலாச்சாரத்தை உடன் நிறுத்துமாறும் வைத்திய பணிப்பாளரை உடன் வெளியேற்றி, நோயாளிகளின் உயிரோடு விளையாடும் வைத்தியரை, அதிகாரத்தில் இருந்து உடனடியாக நீக்குமாறும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை கடந்த 04ஆம் திகதி ஜனாதிபதிக்கு அம்பாறை மாவட்டத்தின் அக்கறைப்பற்று, வைத்தியசாலையில் இடம்பெற்ற சீர்கேடுகள் தொடர்பான மகஜர் ஒன்றும் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
இந்நிவையில் இன்று காலை தொடக்கம் மட்டக்களப்பு, திருகோணமலை, மற்றும் அம்பாறை ஆகிய மாட்டங்களிலுள்ள வைத்தியசாலைகளிலுள்ள வைத்தியர்கள், பணிப்புறக்கணிப்பு போராட்டத்தினை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது
















