முன்னாள் பிரித்தானிய தூதுவர் (Peter Mandelson) பீட்டர் மண்டேல்சன் , பாலியல் குற்றவாளியான (Jeffrey Epstein) ஜெப்ரி எப்ஸ்டினுடனான தனது நீண்டகால நட்புக்காக தற்போது நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியுள்ளார்.
எப்ஸ்டினின் குற்றங்கள் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று அவர் முன்பு கூறியிருந்தாலும், ஆரம்பத்தில் மன்னிப்பு கேட்க மறுத்தமையானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதேவேளை, அரசாங்கத்திடம் அவர் அளித்த தகவல்களை விட எப்ஸ்டினுடனான அவரது கொண்டிருந்த தொடர்பு நெருக்கமானது என்பது மின்னஞ்சல்கள் மூலம் தெரியவந்தமையினால் அவர் தூதுவர் பதவியிலிருந்தும் நீக்கப்பட்டார்.
ஆரம்பத்தில் அவர் ஜெப்ரி எப்ஸ்டினுடன் தான் எவ்விதத்திலும் தொடர்பில் இல்லை என் அதெரிவித்து தன் மீது உள்ள குற்றத்தை மறுத்து வந்தார் .
இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உரிய பாதுகாப்பு கிடைக்காதது குறித்து வருத்தம் தெரிவித்துள்ள மண்டேல்சன், குற்றவாளியுடன் தொடர்பில் இருந்தது தவறு என்பதை இறுதியில் ஏற்றுக்கொண்டார்.
















