பியகமவில் சட்டவிரோதமாக சேகரிக்கப்பட்டு சேமித்து வைக்கப்பட்டிருந்த 19,060 லிட்டர் டீசல் அடங்கிய இரண்டு பவுசர்களை பறிமுதல் செய்ததை அடுத்து, நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
களனி பிரிவு குற்றப் புலனாய்தை் துறையினருக்கு கிடைத்த இரகசியத் தகவலைத் தொடர்ந்து நேற்று மாலை இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.
கைதான சந்தேக நபர்கள் 20, 22, 32 மற்றும் 42 வயதுடையவர்கள் ஆவர்.
இந்த கைதின் போது வாகனங்களில் இருந்து எரிபொருள் எடுக்கப் பயன்படுத்தப்படும் இரண்டு மோட்டார் குழல்கள், 16 பீப்பாய்கள் மற்றும் 381,000 ரூபா ரொக்கப் பணம் ஆகியவற்றையும் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.












