யாழ்ப்பாணம் தாவடியில் அமைந்துள்ள சர்வஜன அதிகாரம் கட்சி அலுவலகம் நேற்று நள்ளிரவு இனந்தெரியாதோரால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
நள்ளிரவு 12.50 மணியளவில் கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் அருண் சித்தார்த் வீடும் கட்டடமும் ஒன்றாக அமைந்துள்ள நிலையில் குறித்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கட்டடத்தின் வாயிலில் இரண்டு பேர் பெற்றோல் ஊற்றி வைத்துவிட்டு தீயைப்பற்ற வைத்தகாக அறிய முடிகிறது.
சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாண பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.












