கென்ட் நகரில் உள்ள கடல் பகுதியில் (Alexander Cashford) அலெக்சாண்டர் காஷ்ஃபோர்ட் என்ற 49 வயது நபர், மூன்று பதின்ம வயது இளைஞர்களால் திட்டமிட்டுத் தாக்கப்பட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
இதேவேளை, இவ்வாறு பாதிக்கப்பட்ட நபர் ஒரு குழந்தை பாலியல் குற்றவாளி என்று தவறாகக் கருதி, இளைஞர்கள் அவரை ஒரு போலிப் பெயரில் குறுஞ்செய்திகள் மூலம் கடற்கரைக்கு வரவழைத்துள்ளனர்.
அங்கு அவரைத் துரத்திச் சென்று போத்தல்கள் மற்றும் கற்களால் மிகக் கொடூரமாகத் தாக்கியதில் அவருக்குத் தலையில் பலத்த காயங்களும் நுரையீரல் பாதிப்பும் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, இந்தச் சம்பவத்தை ஒரு சிறுமி காணொளியாக பதிவு செய்ததோடு, தாக்குதலில் ஈடுபட்ட 16 வயது சிறுவன் தற்போது தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
இந்நிலையில் நீதிமன்ற விசாரணையில் உள்ள இந்த வழக்கு, தன்னிச்சையான நீதி என்ற பெயரில் ஒரு குழு முன்னெடுத்த வன்முறையையும் அதன் கோரமான முடிவையும் சுட்டிக்காட்டுகிறது.
இச்சம்பவம் ஒரு தவறான புரிதலால் உருவான திட்டமிடப்பட்ட கொலை வழக்காக நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
















