யாழ்ப்பாணத்தில் கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்று பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்ட நிலையில் , ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நெல்லியடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள பற்றைக்காடொன்றின் மத்தியில் கசிப்பு உற்பத்தி நிலையம் இயங்குவதாக பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.
தகவலின் பிரகாரம் குறித்த பகுதியை பொலிஸார் சுற்றி வளைத்த வேளை கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டிருந்த நபர்கள் அங்கிருந்து தப்பியோடிய நிலையில் , ஒருவரை பொலிஸார் மடக்கி பிடித்து கைது செய்துள்ளனர்.
அதேவேளை கசிப்பு உற்பத்தி நிலையத்தில் இருந்து 50 லீட்டர் கசிப்பு , 780 லீட்டர் கோடா என்பவற்றுடன் , கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தும் உபகரணங்கள் என்பவற்றையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபரை நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார் , தப்பி சென்ற நபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.












