2026 ஆம் ஆண்டுக்கான இங்கிலாந்து அணியின் இலங்கைச் சுற்றுப்பயணத்தின் ஒருநாள் சர்வதேச (ODI) போட்டித் தொடருக்கான இலங்கைக் குழாமை இலங்கை கிரிக்கெட் தேர்வுக்குழு இன்று (21) அறிவித்துள்ளது.
இந்தத் தொடரில் பங்கேற்கும் இலங்கை அணியின் தலைவராக சரித் அசலங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டிகள் எதிர்வரும் ஜனவரி 22, 24 மற்றும் 27 ஆகிய திகதிகளில் கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளன.



















