வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தின் இல்ல மெய்வல்லுனர் போட்டியின் ஆரம்ப நிகழ்வாக இன்றைய தினம் மரதன் ஓட்டப் போட்டி இடம்பெற்றது.
பாடசாலை வாயில் இருந்து ஆரம்பமான மரதன் ஓட்டத்தில் 105 மாணவர்கள் பங்குபற்றியிருந்ததுடன் மயிலங்குளம் சந்தி வரை சென்று அங்கிருந்து மீண்டும் பாடசாலை மைதானத்தை வந்தடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இம்முறை பாடசாலையின் மரதன் ஓட்ட போட்டியில் பங்குபற்றிய அனைத்து மாணவர்களும் ஒரே சீருடையில் பங்குபற்றியிருந்தமை விசேட அம்சமாக காணப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது .
இந்நிலையில் முதல் 10 இடங்களை பெற்ற மாணவர்களுக்கு மைதானத்தில் வைத்து வெற்றி கேடயங்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.













