அமெரிக்காவின் FBI அமைப்பினால் பல ஆண்டுகளாகத் தீவிரமாகத் தேடப்பட்டு வந்த கனடா நாட்டைச் சேர்ந்த முன்னாள் ஒலிம்பிக் வீரர் ரியான் வெடிங் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல் குழுவை வழிநடத்தியதற்காக மெக்ஸிகோவில் வைத்து அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2002ஆம் ஆண்டு செல்ட் லேக் சிட்டியில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் கனடா சார்பாக இவர் பனிச்சறுக்கு விளையாட்டில் பங்கேற்றுள்ளார்.
மெக்ஸிகோவின் ‘சினலோவா’ (Sinaloa) கார்டெல் அமைப்புடன் சேர்ந்து கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக தலைமறைவாகிய நிலையில் சர்வதேச அளவில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் கொலம்பியாவிலிருந்து மெக்ஸிகோ மற்றும் அமெரிக்கா வழியாக கனடாவிற்கு சுமார் 60 மெட்ரிக் தொன் கொக்கோயின் போதைப்பொருளைக் கடத்தியுள்ளதுடன் தனக்கு எதிராகச் சாட்சி சொல்ல வந்தர்களை ஆட்கள் வைத்து கொலை செய்தாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, மெக்ஸிகோவில் இவரை பிடிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சுமார் 40 மில்லியன் டொலர் மதிப்புள்ள சொகுசு மோட்டார் சைக்கிள்களையும் இரண்டு ஒலிம்பிக் பதக்கங்களையும் சுமார் 55 மில்லியன் டொலர் மதிப்புள்ள சொத்துக்கள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மெக்ஸிகோவில் கைதுசெய்து அமெரிக்காவிற்கு அழைத்து வரப்பட்டுள்ள இவரை நாளையதினம் (26) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
இதேவேளை, குறித்த வழக்கில் இதுவரை 36 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



















