இன்றைய தினம் நிறைவடைந்த நியுசிலாந்து மற்றும் ஐக்கிய அரபு இராஜ்சியத்திற்கிடையிலான போட்டியில் விக்கட் இழப்பின்றி நியுசிலாந்து வரலாற்று வெற்றியை பதிவு செய்து அசத்தியது.
ஐசிசி இருபதுக்கு இருபது உலக கிண்ண கிரிக்கெட் தொடரின் இன்றைய நாளுக்கான போட்டியில் நமிமீயா அணியை நெதர்லாந்து அணி 7 விக்கட்டுக்களால் வெற்றிக்கொண்ட நிலையில் மற்றுமொரு போட்டியாக நியுசிலாந்து மற்றும் ஐக்கிய அரபு இராஜ்சியத்திற்கிடையிலான போட்டி இடம்பெற்றது.
இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஐக்கிய அரபு இராஜ்ஜிய அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கட்டினை இழந்து 173 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
174 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியுசிலாந்து அணி அதிரடி ஆட்டத்தை வெளிப்பெடுத்தி விக்கட் இழப்பின்றி 15.2 ஓவர்களில் 175 ஓட்டங்களை பெற்று உலக கிண்ணத்தில் சாதனை வெற்றியை பதிவு செய்து அசத்தியது.
புள்ளிப்பட்டியலிலும் முதலிடத்திற்கு முன்னேறியதுடன் அடுத்த சுற்றுக்கான வாய்ப்பையும் பிரகாசப்படுத்திக்கொண்டது.
















