சமிக்ஞையை மீறி சென்றதாக கூறி இன்று அதிகாலை யாழ்ப்பாணம் அல்லைப்பட்டி பகுதியில் வைத்து, ஹையேஸ் வாகனம் ஒன்றின் மீது ஊர்காவல்துறை பொலிசார் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் வட்டுக்கோட்டை – சித்தங்கேணி பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்தார்.
இந்நிலையில் குறித்த வாகனத்தில் இருந்து வாள் ஒன்று பொலிஸாரால் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, இந்த சம்பவத்தின் போது மேலும் இரண்டு இளைஞர்கள் குறித்த வாகனத்தில் இருந்த நிலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களை ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளை அவர்களை 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
இதேவேளை, உயிரிழந்த இளைஞனின் உடற்கூற்று ஆய்வில் துப்பாக்கி தோட்டா நெற்றியில் பட்டு , தலைக்குள் ஊடுவி மூளையை துளைத்து சென்றமையால் மரணம் சம்பவத்துள்ளது என தெரிய வந்துள்ளது.
சிறுவனது உடற்கூற்று பரிசோதனை யாழ் போதனா வைத்தியசாலையில் இன்றைய தினம் சட்ட வைத்திய அதிகாரி எம். மயூரதன் முன்னிலையில் நடைபெற்றது.
அதன் போது துப்பாக்கி சன்னம் சிறுவனின் நெற்றியில் பட்டு ஊடுருவி தலையில் மூளையை தாக்கியமையால் மரணம் சம்பவித்துள்ளது என உடற்கூற்று அறிக்கையில் அறிக்கையிடப்பட்டுள்ளது














