வேலை கிடைக்காத விரக்தியில் மகன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அந்த விஷத்தை பறித்து அருந்திய தாய் உயிரிழந்த நிலையில் மகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உத்தரப்பிரதேசம் மாநிலம் நொய்டா பகுதியைச் சேர்ந்தவர் நீரஜ் ஜெயின் (54). இவருக்கு சோனாலி ஜெயின் (52) என்ற மனைவியும், கிஷிதிஜி ஜெயின் (29) என்ற மகனும் உள்ளனர். நீரஜ் ஜெயின் அண்ணாநகரில் குடும்பத்துடன் வசித்து வருகின்றார்.
மேலும் செம்பியத்தில் டிராக்டர் நிறுவனத்தில் துணைத் தலைவராகவும் உள்ளார். இவரது மகன் கிஷிதிஜி ஜெயின் இங்கிலாந்தில் எம்பிஏ படித்துவிட்டு வேலை தேடி வந்தாக கூறப்படுகிறது. அங்கே வேலை கிடைக்காததால் கடந்த டிசம்பரில் சென்னை திரும்பி இங்கு வேலை தேடியுள்ளார்.
சென்னையிலும் வேலை கிடைக்காததால் விரக்தியடைந்துள்ளார். மேலும் இதுதொடர்பாக தாயாரிடம் கூறி வேதனைப்பட்டுள்ளார். அவருக்கு தாய் ஆறுதல் கூறியுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கிஷிதிஜி விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த தாய், அந்த விஷத்தை பறித்து அருந்தியுள்ளார். பின்னர் இருவரும் அங்கேயே மயங்கினர். சிறிது நேரத்துக்குப் பிறகு அங்கு வந்த நீரஜ் ஜெயின் மனைவி மற்றும் மகனை மீட்டு அண்ணா நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.
அங்கு சிகிச்சை பலனின்றி சோனாலி உயிரிழந்தார். மகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக அண்ணா நகர் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்


















