முல்லைத்தீவு – கரைதுறைப்பற்று பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் புதுப்பிக்கப்பட்ட சிறப்பு அங்காடி இன்று முல்லைத்தீவு நகரில் திறந்துவைக்கப்பட்டது.
குறித்த திறப்பு விழா நிகழ்வில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், உபாலி சமரசிங்க, செல்லத்தம்பி திலகநாதன், முல்லைத்தீவு மாவட்டசெயலாளர் அ.உமாமகேஸ்வரன் ஆகியோர் பங்கறே்றிருந்தனர்.















