அணுசக்தி திட்டம் குறித்த ஓர் அர்த்தமுள்ள ஒப்பந்தத்தை முன்னெடுக்க ஈரான் ஒப்புக்கொள்ள வேண்டும். இல்லையெனில், மோசமான விளைவுகள் ஏற்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
நேற்று வொஷிங்டனில் நடைபெற்ற அமைதி வாரிய கூட்டத்தில் உரையாற்றியபோதே ட்ரம்ப் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது ஈரான் ஒப்பந்தம் மேற்கொள்ள, ட்ரம்ப் 10 முதல் 15 நாட்கள் வரை கால அவகாசம் கொடுத்துள்ளார். ‘நாங்கள் ஈரானுடன் ஒரு நல்ல ஒப்பந்தம் செய்துகொள்ளவேண்டும். இது தொடர்பாக பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன. ஈரானுடன் ஒப்பந்தம் முன்னெடுப்பது எளிதல்ல என்பது பல ஆண்டுகளாக நிரூபிக்கப்பட்டு வருகிறது.
இப்போது எம்முடன் அர்த்தமுள்ள ஒப்பந்தத்தை மேற்கொள்ளவில்லை எனில், மோசமான விளைவுகள் ஏற்படும்’ என ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.













